புதுகை, மே 28: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சொந்தப்பொறுப்பில் 12 செவிலியர்களை புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா நியமித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா தொற்று காரணமாக அதிகப்படியான நோயாளிகள் அனுமதிக் கப்பட்டுள்ளதால் அவர்களை பராமரிக்க கூடுதல் செவிலியர்களைசட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா அவர்கள் 12 செவிலியர்களை நியமித்து அவர்களுக்கு மாத ஊதியம் தலா ரூ.10,000 -ஐ தனது சொந்தப் பொறுப்பில் வழங்குதாக அறிவித்தார்.

இதையடுத்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்து தன்னால் நியமிக்கப்பட்ட செவிலியர்களை ஒப்படைத்து பணி நியமன கடிதத்தை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜாவுக்கு செவிலியர்களும் அவரது பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.

புதிய செவிலியர்களாக சுவேதா, ரூபா தேவி, மரியபுஷ்பம், ஷீலா ராணி, தீபா, கனிமொழி , பரிமளேஸ்வரி, கிரிஜாலினி,மங்கை திலகம்,போஸ்வரியா,வித்யா, சந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி ராம்மோகன் நிருபர்.
புதுகை

You missed