புதுகை மே 28: முதலமைச்சரின் நிவாரண நிதியத்துக்கு புதுக்கோட்டை தொழிலதிபர் பேக்கரி மகராஜ்  சீனு சின்னப்பா ரூ.10 லட்சம் நிதி அளித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் , முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.இதைத்தொடர்ந்து தமிழக முதல்வரின் நிவாரண நிதியத்துக்கு தொழிலதிபர்கள், திரையுல பிரபலங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் சாலைகள், தனி நபர்கள் என  ஆயிரக்கணக்கானோர் நிதியளித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டையில் பேக்கரி மகராஜ் நிறுவனங்களின் உரிமையாளரும், தொழிலதிபருமான சீனுசின்னப்பா  முதலமைச்சரின் நிவாரண நிதியத்துக்கு ரூ.10 லட்சத்தை  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரியிடம்  நேரில் வழங்கினார். நிகழ்வில், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன்,  தொழிலதிபர் அருண்  ஆகியோர் உடனிருந்தார்.

செய்தி நிருபர் புதுகை டுடே

You missed