புதுக்கோட்டை, சூன் 9:

புதுக்கோட்டை அருகே மருத்துவர், செவிலியர் இருந்தபோது ஒருநபருக்கு கொரோனா தடுப்பூசி  போட்ட பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், ரகுநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மோகன் என்பவருக்கு அங்கு பணியாற்றி வரும் பணியாளர் தடுப்பூசி போடும் விடியோ வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து அந்த பணியாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து  அறந்தாங்கி சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் நடவடிக்கை எடுத்தார். மேலும் அங்கு பணியில் இருந்த செவிலியர் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு 17-பி  சார்ஜ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

செய்தி புதுகை நிருபர்.

You missed