புதுக்கோட்டை சூன், 15: புதுக்கோட்டையில் கோவிட்சிறப்பு நிவாரண நிதி இரண்டாம் தவணை ரு.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்களின் தொகுப்பை அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினர்.
புதுக்கோட்டை அடப்பன் வயலில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் செவ்வாய்க்கிழமை (15.6.2021) நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன ஆகியோர் வழங்கினர்.
பின்னர் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: கோவிட் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு தடுப்பு; நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருவதுடன் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கொரோனா நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.
முதலமைச்சரின் அறிவிப்பின்படி ஏற்கெனவே முதல்கட்டமாக கொரோனா நிவாரண தொகை ரூ.2000 வழங்கப்பட்டது.
அகன் தொடர்ச்சியாக இரண்டாம் தவணையாக ரூ .2,000 மற்றும் 14 வகையான மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு தற்போது அரிசி குடும்ப அட்டைடதாரர்களுக்கு தற்போது வழங்கப்படுகிறது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதி யின்படி கோவிட் நிவாரண உதவி ரூ.4,000 தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 4,71, 187 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்றார் அமைச்சர் ரகுபதி.
பின்னர் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளைமுன்னிட்டு மக்களின் துயர் துடைக்கும் வகையில் நிவாரணத்தொகையுடன் 14 வகையான பொருள்களின் தொகுப்பும் மக்களுக்கு வழங்கப்படுகிறது பெண்களின் நலனைக்கருத்தில் கொண்டு மகளிர் முன்னேற்றத்துக்காக சுய உதவிக்குழுக்களை தொடங்கியவர் கலைஞர். அவரது வழியில் தளபதி ஸ்டாலின் பொதுமக்களின் நிலை அறிந்து செயல்படக்கூடிய முதல்வராக திகழ்ந்து வருகிறார் என்றார் அவர்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை எமஎல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா, கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, மாவடட் சமூக நல அலுவலர் ரேணுகா, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, நைனா முகமது, வீரமணி, பாலு, அறிவுடைநம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி புதுகை நிருபர்.