கந்தர்வகோட்டையில் நரிக்குறவர் இன மக்களுக்கு  எல்எல்ஏ- சின்னத்துரை நிவாரணப் பொருட்கள் வழங்கல்

புதுக்கோட்டை, ஜூன்.6- வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு நிவாரப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொரோனா ஊரடங்கால்  வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நரிக்குறவ இன மக்களுக்கு காய்கறிகள் அரிசி மளிகைப் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையை அடுத்த ரங்கம்மாள் சத்திரம் பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை தொடங்கி வைத்தார். மேலும், அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் நிவாரண பொருட்களை வழங்க வந்த சட்டமன்ற உறுப்பினரிடம் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி தெ.கலைமுரசு, மாவட்டப் பொறுப்பாளர் பாவாணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, விசிக ஒன்றியச் செயலாளர் பாண்டியன், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தி புதுகை நிருபர்.

You missed